TAMIL LITERATURE

TAMIL LITERATURE

 

Syllabus:

Paper-I

Answers must be written in Tamil.

Section: A

Part: 1 History of Tamil Language

Major Indian Language Families-The place of Tamil among Indian languages in general and Dravidian in particular-Enumeration and Distributionof Dravidian languages.

The language of Sangam literature-The language of medieval Tamil: Pallava period only-Historical study of Nouns, Verbs, adjectives, adverbs Tense markers and case markers in Tamil.

Borrowing of words from other languages into Tamil-Regional and social dialects-difference between literary and spoken Tamil.

Part: 2 History of Tamil Literature

Tolkappiyam-Sangam Literatue-The division of Akam and puram-The secular characteristics of Sangam Literature-The development of Ethical

literature-Silappadikaram and Manimekalai.

Part: 3

Devotional literature (Alwars and Nayanmars) The bridal mysticism in Alwar hymns-Minor literary forms (Tutu, Ula, Parani, Kuravanji)

Social factors for the development of Modern Tamil literature: Novel, Short story and New Poetry-The impact of various political ideologies on modern writings.

Section:B

Part:1

Recent trends in Tamil Studies

Approaches to criticism: Social , psychologiocal, hostorical and moralistic-the use of criticism-the various techniques in literature: Ullurai, Iraicchi, Thonmam (Myth) Otturuvagam (allegory), Angadam (Satire), Meyppadu, Padimam(image), Kuriyeedu (Symbol), Irunmai (ambiguity)-The concep[t of comparative literature-the principle of comparative literature.

Part: 2

Folk literature in Tamil:Ballads, Songs, proverbs and riddles-Sociological study of Tamil folklore. Uses of translation-Translation of Tamil works into other languages-Development of journalism in Tamil.

Part: 3

Cultural Heritage of the Tamils

Concept of Love and War-Concept of Aram-the ethical codes adopted by the ancient Tamils in their warfare-customs, beliefs, rituals, modes of worship in the five Thinais. The cultural changes as revealed in post sangam literature-cultural fusion in the medieval period (Jainism & Buddhism). The development of arts and architecture through the ages (Pallavas, later cholas, and Nayaks). The impact of various political, social, religious and cultural movements on Tamil Society. The role of mass media in the cultural change of contemporary Tamill society.

Paper-II

Answers must be written in Tamil.

The paper will require first hand reading of the Text prescribed and will be designed to test the critical ability of the candidate.

Section-: A

Part: 1 Ancient Literature

(1) Kuruntokai (1-25 poems)

(2) Purananurui (182-200 poems)

(3) Tirukkural Porutpal : Arasiyalum Amaichiyalum (from Iraimatchi to Avaianjamai)

Part : 2 Epic Literature

(1) Silappadikaram: Madhurai Kandam only.

(2) Kambaramayanam: Kumbakarunan Vadhai Padalam

Part 3: Devotional Literature

(1) Tiruvasagam: Neetthal Vinnappam

(2) Tiruppavai: (Full Text)

Section-: B

Modern Literature

Part:1 Poetry

(1) Bharathiar: Kannan Pattu

(2) Bharathidasan: Kudumba Vilakku

(3) Naa. Kamarasan: Karuppu Malarkal

Prose

(1) Mu. Varadharajanar. Aramum Arasiyalum

(2) C N Annadurai: Ye! Thazhntha Tamilagame.

Part : 2

Novel, Short story and Drama

(1) Akilon: Chittirappavai

(2) Jayakanthan: Gurupeedam

(3) Cho: Yarukkum Vetkamillai

Part: 3

Folk Literature

(1) Muthuppattan Kathai Edited by Na. Vanamamalai, (Publication: Madurai Kamaraj University)

(2) Malaiyaruvi, Edited by Ki. Va Jagannathan (Publication: Saraswathi, Mahal, Thanjavur)

Reference Books:

தமிழ்த்தாள் 1 – Tamil Literature Paper 1 Books

1 . தமிழ் இலக்கிய வரலாறு – மு வரதராசன்

    தமிழ் இலக்கிய வரலாறு – தமிழண்ணல்

    தமிழ் இலக்கிய வரலாறு – வாசுதேவன்

2 . தமிழ் மொழி வரலாறு – சு சக்திவேல்

3 . திறனாய்வு கலை – தி சு நடராசன்

4 . நாட்டுப்புற இயல் ஆய்வு –  சு சக்திவேல்

5 . திராவிட மொழிகளின் ஒப்பாய்வு – ஜி ஜான் சாமுவேல்

6 . தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ தட்சிணாமூர்த்தி

7 . இதழியல் கலை  – டாக்டர் மா.பா.குருசாமி

  1. varalaaru .com – கட்டடக் கலை ஆய்வு

9 . இலக்கிய உத்திகள் – நாகு  அய்யா notes , தேவீரா அய்யா notes

10 . Virtual university notes – http://www.tamilvu.org/ – refer for every part of the portion

11 . தமிழ் செம்மொழி மலர் புக்

12 . ஒப்பிலக்கிய கோட்பாடு – க ந கைலாசபதி

13 . சிலப்பதிகார திறனாய்வு – ம போ சிவஞானம்

  1. தமிழ்நாடு அரசு பள்ளி பாடநூல் – 6th to 12th std  – refer portions overlapping with our syllabus

தமிழ்த்தாள் 2 – Tamil Literature Paper 2 Books 

1 . மலை அருவி – கி வ ஜகந்நாதன்

2 . குருபீடம் – ஜெயகாந்தன்

3 . யாருக்கும் வெட்கமில்லை – சோ

4 . அறமும் அரசியலும் – மு வரதராசன்

5 . சித்திரப்பாவை – அகிலன்

6 . கண்ணன் பாட்டு – சி டி சங்கர நாராயணன்

7 . முத்துப்பட்டன் கதை – நா வானமாமலை

8 . கும்பகர்ணன் வதைபடலம் – துரை ராசாராம்

    கம்பன் காட்டும் கும்பகர்ணன் – புலவர் அருணகிரி

9 . ஏ தாழ்ந்த தமிழகமே – C N அண்ணாதுரை

10 . திருவாசகம் ( நீத்தல் விண்ணப்பம் ) – சிவ சிற்றம்பலம்

11 . திருப்பாவை – C.சுப்ரமணியன்

12 . குடும்ப விளக்கு – பாரதிதாசன்

13 .  கண்ணன்பாட்டு – பாரதியார்

14 . குறுந்தொகை – புலியூர் கேசிகன் உரை

15 . திருக்குறள் – பரிமேலழகர் உரை

16 . சிலப்பதிகார சிந்தனைகள் : சு செல்லப்பன்

Strategy – Tamil Literature Paper 1

தமிழ் முதல் தாள் அணுகுமுறை திரு . லட்சுமண பெருமாள் ( மதிப்பெண் – 210 / 250 – 1st mark in Paper 1 )

1 . படிக்கும் பொழுது syllabus வைத்து அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும் .

2 . மறக்கக் கூடியவற்றை குறிப்புகளாக எடுத்துக்கொண்டு திரும்ப திரும்ப நினைவுபடுத்துதல் அவசியம்.

3 . படித்த புத்தகங்களைத் திரும்பத் திருyம்ப படிக்கும்போதும் , மாதிரித்தேர்வுகள் எழுதும் போதும் நினைவாற்றல் கூடும் .

4 . கால அடிப்படையில் தமிழ் படிக்கும்போது , தமிழ் இரண்டாம் தாள் உதவியாக இருக்கும் . பெயர்ச்சொல் , வினைச்சொல் , வேற்றுமை உருபுகள் , கால இடைநிலைகளுக்கான எடுத்துக்காட்டுகளை  பாடப்பகுதியில் இருந்தே எழுதலாம் .

5 . Tamilvu இணையதளம் அதிக தரவுகளைக் கொண்டிருக்கிறது [ கதைப்பாடல்கள் – அதன் சான்று , தமிழர் நம்பிக்கைகள் , சடங்குகள் ஆகியவற்றிற்குச் மிகச் சிறந்த source tamilvu ]

6 . தேர்வின் பொது ஆரம்பத்தில் இருந்து விடை அளிப்பது நன்று. ஆரம்பத்தில் அனைவர்க்கும் நல்ல கையெழுத்து இருக்கும் . நல்ல தொடக்கம் திருத்துபவர்க்கு நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் .

7 . கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு விடையளிக்க வேண்டும்,

உதாரணத்திற்கு நவீன தமிழ் இலக்கியங்களில் அங்கதம்  பற்றி எழுதுக என்ற கேள்வியில் நவீன இலக்கியம் என்பதே  முக்கியமான வார்த்தை . இங்கு சங்க இலக்கிய உதாரணங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை .

மேலும் கேள்விக்கான பதிலை பரந்துபட்ட அளவில் எழுதுவது (diversified and broad view ) அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தரும் .  

8 . மேற்கோள்கள், எடுத்துக்காட்டுகள் பதிலுக்கு அவசியமானவை . உங்களின் பதிலைப் பிறரிடம்  இருந்து வேறுபடுத்தும் மிக முக்கியமானவை இவையே .

9 . ஊடகம் , மொழிபெயர்ப்பு பற்றிய கேள்விகளுக்கு நடப்பு நிகழ்வுகளைச் சான்றுகளாக எழுதலாம் . எடுத்துக்காட்டு : அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி பொறியியல் படிப்பு , மொழிபெயர்ப்பின் மூலமே சாத்தியமானது ; செய்தித்தாள் மூலம் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக விருதுநகர் மாவட்ட சிறுவன் ஆசிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றான் – பண உதவி கிடைத்தது .

10 . முடிந்த கேள்விகளுக்கு உட்தலைப்பு தரலாம் . தேவையான கேள்விகளுக்கு point wise பதில் அளிக்கலாம் .

11 . கொடுக்கப்பட்ட அனைத்து பக்கங்களையும் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை . நேரம் , கேள்விக்கான பதில் , கடினத்தன்மை ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் .  

ஒரு சிறிய சான்று :

நவீன தமிழ் இலக்கியங்களில் அங்கதம் ‘

இக்கேள்வியை படித்தவுடன் பல விதமான அங்கதக் கவிதைகளே ஞாபகத்திற்கு வரும். வெறும் கவிதைகளில் உள்ள உதாரணங்களை மட்டும் காட்டாமல் அதையும் தாண்டி நம் சிந்தனை செல்கிறதா என்பதை ஆராயவே இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது .

பதில்  :

நாடகத்தில் :

‘யாருக்கும் வெட்கமில்லை ‘ நாடகத்தில் இருந்து ஒரு உதாரணம்

கவிதையில் :  

‘ மருமக்கள் வழி மான்மியம் ‘ – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய அங்கதக் கவிதை நூலில் இருந்து ஒரு நிகழ்ச்சி .

புதுக்கவிதையில் :

‘அன்புடைமை’

அதிகாரம் நடத்துகிறார்

ஆசிரியர் – கையில் பிரம்புடன் .

சிறுகதையில் :

ஜெயகாந்தன் ‘குருபீடம்’ ஒரு சான்று

__________

மற்றொரு சான்று :

சங்க இலக்கியங்களில் உலக பொதுமை (10 )

10  மார்க் கேள்விக்கு பதிலளிக்க சராசரியாக 6 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம் .   இந்த 6 நிமிடங்களில் நம்மால் முடிந்த வரை பல சங்க இலக்கியங்களில் இருந்து இக்கேள்விகளுக்குப் பொருந்துமாறு  செய்திகளை யோசித்து , அதை கோர்வையாக எழுதும் பயிற்சி வேண்டும் .

மேற்கண்ட கேள்விக்கு திரு.லட்சுமண பெருமாள் அவர்கள் எழுதிய பதிலின் சுருக்கம் :

1 . குறுந்தொகை – காதல் போற்றும் தன்மை , இயற்கை நிகழ்விற்கு முக்கியத்துவம் ( முதற்பொருள் , கருப்பொருள் )

2 . புறநாநூறு – சமயசார்பற்றத்தன்மை , கல்விக்கு முக்கியத்துவம் , ஈதல் தன்மை ( செல்வத்துப் பயனே ஈதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர்

3 . நற்றிணை – முந்தை இருந்து நாட்டோர் குடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்

4 . கலித்தொகை – பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் , அன்பெனப்படுவது தன்கிளை செறா அமை

5 . ஆற்றுப்படை – பிறர்க்கு வழிகாட்டும் தன்மை

________________

Strategy – Tamil Literature Paper 2

தமிழ் இரண்டாம் தாள் அணுகுமுறை – மதுபாலன் ( 152 / 250 – 1st mark in paper 2)

இரண்டாம் தாளின் கேள்விகள் அனைத்தும் தேர்வு எழுதுபவரின் திறனாய்வு ஆற்றலை கண்டறியும் வகையில் அமைந்து இருக்கும் .

இத்தாளின்  பாடப்பகுதிகளும் அவற்றின் அணுகுமுறைகளும் பின்வருமாறு :

1 . பழந்தமிழ் இலக்கியம் –

   – புறநானூறு : ஒவ்வொரு வருடமும் ஒரு 15 மார்க் கேள்வி நிச்சயம். ஆகையால் பாடல்களை எழுதி பயிற்சி செய்து எழுத்துப்பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . திருக்குறளில் இருந்து குறட்பாக்களை தேர்வு செய்து  புறநானூறு பாடல்களுக்கு மேற்கோளாகக் காட்டலாம் . பாடல்கள் இயற்றிய புலவர்களின் பெயர் , பாடல் துறைகள் போன்றவற்றை நினைவில் கொண்டு தேர்வில் எழுதுவது மதிப்பெண்களை அதிகப்படுத்தும் .

  – குறுந்தொகை : மிகவும் ரசித்து படிக்க வேண்டிய பாடப்பகுதி.  ‘ இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக ‘ பகுதியில் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு . ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ற குறள் அல்லது அறிஞர்களின் மேற்கோள்கள் ஆகியவற்றை சேகரித்து பாடலின் நயத்தை போற்றி  எழுதினால் நல்ல மதிப்பெண் உறுதி .

  – திருக்குறள் : கொடுக்கப்பட்டுள்ள 35 அதிகாரங்கள்  பரிட்சைக்கு மட்டுமல்ல , வாழ்க்கைக்கே உதவுவது . ஒவ்வொரு அதிகாரத்திலும் 4 அல்லது 5 குறட்பாக்களை மனனம் செய்து கொள்ள வேண்டும். ஒரு அதிகாரத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை புரிந்து சுயமாக சிறு குறிப்புக்கள் செய்துகொண்டால் revision செய்யும் பொழுது எளிதாக இருக்கும். மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது திருக்குறள் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் , குறளினை வெவ்வேறு இடங்களில் மேற்கோள் காட்டும்போது உங்கள் பதிலின் தரம் உயரும். ஆகவே நண்பர்களே  குறளினைப் படிப்பதற்கு தயங்க வேண்டாம் , செலவிடப்படும் நேரத்திற்கான பயன் உங்களை நிச்சயமாக வந்தடையும் .

2 . காப்பியம் :

  – சிலப்பதிகாரம் : மதுரைக் காண்டம் மட்டுமே syllabus – இல் உள்ளது . ஒவ்வொரு காதையிலும் சில முக்கியமான வரிகளை மனப்பாடம் செய்துகொள்ளவும் . ஒவ்வொரு காதையையும் படித்தபின்பு , அக்காதையின் நிகழ்ச்சிப் போக்கினை குறிப்பு எடுத்துக்கொண்டால் ஞாபகம் வைத்துக்கொள்ள எளிதாக இருக்கும் . சிலப்பதிகார திறனாய்வு –  Dr. Ma.Po.சிவஞானம் , சிலப்பதிகார சிந்தனைகள் : சு செல்லப்பன் போன்ற புத்தகங்களில் இருந்து தரவுகள் எடுத்துக் கொள்ளலாம் . தமிழ் ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்த பகுதி ஆதலால் , சிலப்பதிகார கேள்விகள் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தருவதாக அமையும் . ஆகவே திருக்குறளுக்கு நிகரான உழைப்பினைச் செலுத்த வேண்டிய பகுதி இது.

 – கும்பகர்ணன் வதைப்படலம் : இதுவரை தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில்களை தயார் செய்துகொள்ளுங்கள் . மிகக் குறைவான பாடல்களை மனப்பாடம் செய்தால் போதுமானது . கம்பன் காட்டும் கும்பகர்ணன் – புலவர் அருணகிரி என்ற புத்தகம் சிறந்த திறனாய்வு . ஒரு முறை படித்து குறிப்புக்கள் எடுத்துக்கொள்ளவும் .

3 . பக்தி இலக்கியம் :

  – திருவாசகம் : பழைய கேள்வித்தாள்களை  புரட்டிப்பார்த்தால் இடம் சுட்டி பொருள் தருக பகுதியில் என்ன என்ன பாடல்கள் கேட்கப்பட்டுள்ளதோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் தரவும். ஏற்கனவே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில்கள் தயாரித்து வைத்துக்கொண்டாலே போதும் , எந்த கேள்வி வந்தாலும் இந்த பதில்களை மாற்றி மாற்றி எழுதி சமாளித்து விடலாம்.

  – திருப்பாவை : இலக்கிய நயம் வாய்ந்த பகுதி.  மொத்தமே 30 பாடல்கள். மனனம் செய்வதும் எளிது. எனவே 15 பாடல்களாவது மனனம் செய்து கொள்ளவும் . ஆண்டாள் பற்றிய சாகித்ய அகாடமி – இன் சிறிய புத்தகத்தில் இருந்து சில நல்ல குறிப்புகளை எடுத்துக்கொள்ளலாம் . மனப்பாடம் செய்த பாடல்களின் ஒவ்வொரு வரியையும் நயம் பாராட்ட கற்றுக்கொள்ளவும் . திருப்பாவை கேள்விகள் எளிதாக அதிக மதிப்பெண்களை பெற்றுத்தரும். எனவே கொஞ்சம் கூடுதல் உழைப்பினைப் போடுவதில் தவறில்லை .

  1. கவித

     – கண்ணன் பாட்டு : ஒவ்வொரு தலைப்பில் உள்ள பாடலும் ஒரு கேள்வி என எடுத்துக்கொள்ளலாம் . கண்ணன் என் காதலன் , காதலி தவிர்த்து மற்ற 11 தலைப்புகளுக்கு , 15 மார்கில் கேட்டால் எழுதுவதற்கு தகுந்தாற் போல் பதிலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும் . காதலன் காதலி தலைப்பிற்கு நான்கு பக்க notes எடுத்து வைத்துக் கொண்டால் அதில் இருந்து எத்தகைய கேள்வி வந்தாலும் பதில் அளித்துவிடலாம்.

   – குடும்ப விளக்கு : சுவாரசியமான பகுதி. நிறைய கேள்விகள் கேட்பதற்கு scope உள்ள பகுதி ஆதலால் கதைப்போக்கினை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் . ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேடிய பின்பு வேறு என்ன கேள்விகள் இப்பகுதியில் இருந்து கேட்க முடியும் என்று சிந்திக்க வேண்டும் . 2017 mains – இல்  கேட்கப்பட்ட ‘ மாமி மருமகள் உறவு குடும்ப விளக்கில் எவ்வாறு வருணிக்கப்படுகிறது?’ என்ற கேள்வி புதிது . முன்னரே சிந்தித்து வைத்து தயார் செய்துகொள்ளவில்லையானால் இது போன்ற புதிய கேள்விகளை தேர்வு அன்று எதிர்கொள்வது கடினமாகிவிடும் .

  – கறுப்பு மலர்கள் : தற்கால நடையில் எழுதப்பட்டு உள்ளதால் மனனம் செய்வது எளிது . கவிதையின் தலைப்பை யாராவது உங்களிடம் கூறினால் உடனே அதனுள் உள்ள content என்ன என்பதை crisp – ஆக கூறும் வண்ணம் தயார் செய்துகொள்ளவும். 10 மார்க் கேள்வியில் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு .

5 . உரைநட

      – அறமும் அரசியலும் : எத்தனை முறை படித்தாலும் படிக்காததை போலவே இருக்கும் புத்தகம் . எந்த தலைப்பின் கீழ் என்ன வருகிறது என்பதை நினைவில் கொள்ள முடியாத வண்ணம் பல குழப்பங்கள் வரும் . பழைய கேள்விகளுக்கு பதில் திரட்டவும் . இப்பகுதியில் இருந்து வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தாலும் நல்ல மதிப்பெண்ணை எதிர் பார்க்க முடியாது . ஆகவே முடிந்த வரை இப்பகுதியில் இருந்து வரும் கேள்வியை choice – இல் விட்டுவிடுவது நல்லது .

     – தாழ்ந்த தமிழகமே : மொத்தமே 40 பக்க புத்தகம் . நன்றாக படித்து புரிந்து கொண்டு 10 பக்கமாக சுருக்கிக்கொள்ள வேண்டும் . அண்ணாவை பற்றிய கூடுதல் தகவல்கள் , மக்களாட்சி மன்னராட்சி பற்றி பெருந்தலைவர்களின் கருத்துகள் ஆகியன கூடுதல் மதிப்பெண்களை உறுதி செய்யும் .

6 . நாவல் சிறுகதை நாடகம

    – சித்திரப்பாவை : விருப்பத்துடன் இக்கதையை இரண்டு முறை படித்தாலே போதும். எப்படிப்பட்ட கேள்விக்கும் பதில் தந்துவிட முடியும் .  கதைமாந்தர்களின் பெயர்கள் , குறிப்பிட்ட வசனங்கள் போன்றவற்றை மாற்றி எழுதிவிடாமல் கவனத்துடன் இருக்க வேண்டும் . வரும் வருடங்களில் இப்பகுதியில் இருந்து புதிய கேள்விகளை நிச்சயம் எதிர் பார்க்கலாம் .

  – குருபீடம் :  ஒவ்வொரு கதைக்கும் முன்னுரை, முடிவுரை , முக்கியமான வசனங்கள் , கதையோடு ஒத்துப்போகும் பழமொழிகள் போன்றவற்றை தயார் செய்தாலே போதுமானது .

  – யாருக்கும் வெட்கமில்லை : இக்கதையோடு ஒத்துப்போகும் கவிதைகளை இணையத்தில் தேடலாம் . சில வசனங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் , அதை அப்படியே எழுதலாம் , தவறில்லை .

7 . நாட்டுப்புற இலக்கியம

   – முத்துப்பட்டன் கதை : பழைய கேள்விகளுக்கு பதில் தயார் செய்தாலே போதும். அதை தாண்டி புதிதாகக் கேள்விகள் வர வாய்ப்பில்லை .

  – மலையருவி : 12 தலைப்புகள் . ஒவ்வொரு தலைப்பிலும் 5 அல்லது 6 பாடல்கள் மனப்பாடம் செய்வது போதுமானது .

 

Previous Year Question Papers:

 

20142015201620172018
Paper – 1

Paper – 2

Paper – 1

Paper – 2

Paper – 1

Paper – 2

Paper – 1

Paper – 2

Paper – 1

Paper – 2